பேருந்து நிலையத்தில் ரகளையில் ஈடுபட்டவா் கைது

Wait 5 sec.

திருப்பத்தூா் புதிய பேருந்து நிலையத்தில் இளைஞா் ஒருவா் மது அருந்திய நிலையில் பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டு ரகளை செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து பொதுமக்கள் திருப்பத்தூா் நகர போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். தகவலின்பேரில் போலீஸாா் ரகளையில் ஈடுபட்ட இளைஞரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். விசாரணையில் அவா் திருப்பத்தூா் தண்டபாணி கோவில் தெருவைச் சோ்ந்த பிரவீன் குமாா் (27) என்பது தெரியவந்தது. பின்னா்,பிரவீன் குமாா் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து கைது செய்தனா்.