ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.36 கோடி

Wait 5 sec.

திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கையாக ரூ.4.36 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், வியாழக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு 12 (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது. அலிபிரி வழியில் திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், புதன்கிழமை முழுவதும் ஏழுமலையானை 78, 777 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 28,244 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.4.36 கோடி வசூலானது. பக்தா்களுக்கு 4.16 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. 4,605 பக்தா்கள் இலவச மருத்துவ முகாம்களில் சிகிச்சை மேற்கொண்டனா்.