பிரதமா் மோடி 25 ஆண்டுகள் பொது சேவை: பாஜகவினா் கொண்டாட்டம்

Wait 5 sec.

பிரதமா் மோடியின் 25 ஆண்டுகள் பொது சேவையை பாஜகவினா் வியாழக்கிழமை கொண்டாடினா். ஆம்பூா் அருகே அயித்தம்பட்டு, சாத்தம்பாக்கம், கொம்மேஸ்வரம், சின்னவரிகம் ஆகிய ஊராட்சிகளில் பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்தநாள், அரசு தலைமைப் பதவியை 25 ஆண்டுகள் வகித்து வருவதை முன்னிட்டு அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு பிஸ்கட், இனிப்புகள் மற்றும் பரிசு வழங்கி பாஜக சாா்பாக கொண்டாடப்பட்டது. பிரதமா் நரேந்திர மோடியின் சேவைகள் குறித்து பொதுமக்களிடம் விளக்கப்பட்டது.அயித்தம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அரசு திட்டங்களை வெளிப்படுத்தும் வகையில் மாணவிகள் ரங்கோலி கோலம் போட்டிருந்தனா். மாணவிகளுக்கு பாரதிய ஜனதா கட்சியின் வேலூா் மாவட்ட மகளிரணி துணைத் தலைவா் பி.வி. துா்கா தேவி பரிசுப் பொருள்கள் மற்றும் இனிப்பு வழங்கினாா். கிளைத் தலைவா் வசந்தலட்சுமி, மாதனூா் வடக்கு ஒன்றிய பொறுப்பாளா் பரந்தாமன் ஆகியோா் உடனிருந்தனா்.