அடுத்த 3 மணி நேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சுமார் 0.9 கி.மீ உயரத்தில் தெற்கு கடலோர கேரளப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.சுமார் 0.9 கி.மீ உயரத்தில் தெற்கு கடலோர கேரளப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து தெற்கு உள் கர்நாடகம் வரை ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.இதன் காரணமாக, இன்று (அக். 8) கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், நாமக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாகத் தெரிவித்திருந்தது.அடுத்த 3 மணி நேரத்துக்கு (இரவு 10 மணி வரை) நாமக்கல், கரூர், பெரம்பலூர், சேலம், கள்ளக்குறிச்சி, மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களின் சில இடங்களிலும், திண்டுக்கல், தஞ்சாவூர், அரியலூர், சிவகங்கை, திருவாரூர் மாவட்டங்களின் குறிப்பிட்ட இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.The Chennai Regional Meteorological Centre has stated that there is a possibility of rain in 12 districts over the next three hours.கோவை உள்பட 3 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!