நடிகர் சூர்யா நாயகனாக நடிக்கும் “சீன்” திரைப்படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில், நடிகர் சூர்யா நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் ”சீன்”. இப்படத்தை, சூர்யாவின் புதிய தயாரிப்பு நிறுவனமான ழகரம் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.புதுமையான தோற்றத்தில் சூர்யா காவல் துறை அதிகாரியாக நடித்துள்ள இந்தப் படத்தில், மலையாள நடிகர்கள் நஸ்லன், நசீரியா நஜிம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த நிலையில், இசையமைப்பாளர் சுஷின் ஷியாம் இசையில் உருவாகும் “சீன்” படத்தின் “ஆத்தி இவ யார்ரா” எனும் முதல் பாடலை இன்று (அக்.8) படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தப் பாடலை இன்ஸ்டா பிரபலம் ராஜ்பிரியன் எழுதிப் பாடியுள்ளார். வரும் நவம்பர் 6 ஆம் தேதி “சீன்” திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டிரைலர் இணையத்தில் பெரும் கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.The first song from the movie "Scene," starring actor Suriya, has been released.