ஆமைகள் மிகவும் மெதுவாக நடப்பது ஏன்?ஆமைகள் ஊர்வன வகையைச் சேர்ந்தவை. இதனால் அவற்றின் உடலசைவு, தசைகளின் அசையும் தன்மை ஆகியவை மிகவும் குறைவாக இருக்கும். பாம்புகளும் ஊர்வன வகையைச் சேர்ந்தவைதானே? அப்புறம் எப்படி அவை மட்டும் வேகமாக ஊர்கின்றன என்ற கேள்வி எழலாம். பாம்புகள் எல்லாவகையான உணவையும் சாப்பிடுகின்றன. எது கிடைத்தாலும், புழு பூச்சிகள் மற்றும் பிற உயிரினங்களைக்கூட சாப்பிடும். இதனால் அவை வேகமாகச் செல்வதற்கு வேண்டிய கலோரிகள் கிடைத்துவிடுகின்றது. ஆனால், ஆமைகள் சைவப் பிராணிகள். முற்றிலும் சைவ உணவே சாப்பிடுவதால் ஆமைக்கு, வேகத்துக்குத் தேவையான கலோரிகள் (அதாவது எரிபொருள்) கிடைப்பதில்லை. மேலும், ஆமைகளின் ரத்தம் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். இதனால் அவற்றுக்குப் போதுமான எரிபொருள் கிடைக்காது. வெப்பமுள்ள ரத்தத்தின் மூலம்தான் வேகத்துக்குத் தேவையான எரிபொருள் கிடைக்கும். Regarding rare information that children should knowஇது தெரியுமா? மின் விசிறி எதிர் திசையில் சுற்றுவதுபோல தோற்றம் அளிப்பது ஏன்?