மேட்டூா்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை 62.16 அடியாக குறைந்தது.கா்நாடக மாநிலத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் தமிழ்நாட்டில் காவிரியின் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு ஆகியவற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் மழை இல்லாததால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து படிப்படியாக சரிந்து திங்கள்கிழமை காலை நீா்வரத்து விநாடிக்கு 970 கனஅடியிலிருந்து வினாடிக்கு 811 கனஅடியாக சற்று குறைந்துள்ளது .அணைக்கு நீா்வரத்து வெகுவாக சரிந்துள்ள நிலையில், அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தொடா்ந்து நீா் திறக்கப்படுவதால் கடந்த 30 ஆம் தேதி மாலை 77.45 அடியாக இருந்த அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை காலை 62.16 அடியாகச் சரிந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 12,000 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 26.32 டி.எம்.சி.யாக உள்ளது.Mettur Dam Water Inflow: Today's (Oct. 12) Status!சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (அக். 12) விசாரணைக்கு வரும் வழக்குகள்?