நவராத்திர விழா! மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ராஜராஜேஸ்வரி அலங்காரம்!!

Wait 5 sec.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெறுகிறது. முதல் நாளான ஞாயிறன்று மாலை ராஜராஜேஸ்வரி அலங்காரத்தோடு பக்தர்களுக்கு காட்சியளித்தார் அம்மன். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை முதல் நவராத்திரி விழா தொடங்கி அக்டோபர் 20 ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெற உள்ளது.உங்கள் வீட்டு கொலு புகைப்படங்களை பகிர்ந்து கொள்ள...நவராத்திரி திருவிழா நடைபெறும் ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரங்கள் மற்றும் வழிபாடுகள் நடைபெற உள்ளன. மேலும், கொலுச்சாவடியில் எழுந்தருளும் உற்சவ அம்மனுக்கு ஒவ்வொரு நாளும் விதவிதமான சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட உள்ளன.அதன்படி, முதல் நாளான ஞாயிறன்று (அக்டோபர் 11), ராஜராஜேஸ்வரி அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. நவராத்திரியின் முதல் நாளான நேற்று ராஜராஜேஸ்வரி அலங்காரத்தோடு பக்தர்களுக்கு அம்மன் காட்சியளித்தார்.தொடர்ந்து 2ஆம் நாளான அக்டோபர் 12ஆம் தேதி அர்த்தநாரீஸ்வரர் திருக்கோலம், 3ஆம் நாளான அக்டோபர் 13ஆம் தேதி கோலாட்டம், 4ஆம் நாளான அக்டோபர் 14ஆம் தேதி பட்டாபிஷேக திருக்கோலம், 5வது நாளான அக்டோபர் 15ஆம் தேதி தபசு அலங்காரம் நடைபெறும்.6வது நாளான அக்டோபர் 16ஆம் தேதி ஊஞ்சல் உற்சவம், 7ஆம் நாளான அக்டோபர் 16ஆம் தேதி முத்தங்கி சேவை, 8வது நாளான அக்டோபர் 18ஆம் தேதி மஹிஷாசுரமர்த்தினி காட்சி, 9வது நாளான அக்டோபர் 19ஆம் தேதி சிவபூஜை மற்றும் 10வது நாளான அக்டோபர் 20ஆம் தேதி விஜயதசமி சடையலம்புதல் போன்ற அலங்காரங்களில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார்.நவராத்திரியை முன்னிட்டு காலை - மாலை வேளைகளில் கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் திருமுறை இன்னிசை, பக்தி இன்னிசை, பரதநாட்டியம், ஆன்மீகச் சொற்பொழிவுகள் மற்றும் கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் மேற்கொண்டனர்.