தான்கெடினும், தக்கார்கேடு எண்ணற்க! தன்னுடம்பின்ஊன்கெடினும், உண்ணார்கைத்து உண்ணற்க!-வான்கவிந்தவையகம் எல்லாம் பெறினும், உரையற்க,பொய்யோடு இடைமிடைந்த சொல்!(பாடல் 80 அதிகாரம்: பொறை உடைமை) தான் அழியவே நேர்ந்தாலும் அதனை நீக்கிக் கொள்ளும் பொருட்டு மேலோர்களுக்குக் கேடு செய்வதை ஒருவன் எண்ணாதிருப்பானாக. தன் உடம்பின் ஊனே வற்றி, உடலே அதனால் அழிவதானாலும், உண்ணத்தகாதவர் கையிலிருந்து கிடைக்கும் உணவை ஒருவன் ஒருபோதும் உண்ணாதிருப்பானாக. வானம் கவிந்துள்ள உலகம் அனைத்துமே பெறுவதாயிருந்தாலும், பொய் இடையிடையிலே கலந்த சொல்லை, ஒருவன் என்றுமே சொல்லாதிருப்பானாக!