நடிகர் ரவி தேஜா நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது. அடடா சுந்தரா, சரிபோத சனிவாரம் உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய விவேக் ஆத்ரேயா அடுத்ததாக நடிகர் ரவி தேஜாவை வைத்து புதிய திரைப்படத்தை இயக்குகிறார். நடிகர்கள் அனஸ்வரா ராஜன், பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்திற்குத் துலாபாரம் எனப் பெயரிட்டுள்ளனர். விவேக் சாகர் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. வெற்றிப்படங்களைக் கொடுத்த இயக்குநர் என்பதாலும் ரவி தேஜாவின் கடைசி படம் இருமுடி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதாலும் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. The pooja for the new film starring actor Ravi Teja has taken place.