சென்னையில் பள்ளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, திருவள்ளுவரையும் பாரதியாரையும் மேற்கோள் காட்டி மாணவர்களுடன் உரையாற்றினார். சென்னை நந்தம்பாக்கம் ஜெயகோபால் கரோடியா பள்ளியின் 50 ஆம் ஆண்டு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். விழாவில் ஆளுநர் அர்லேகர், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள செய்யறிவு (ஏஐ) ஆய்வகத்தை பிரதமர் மோடி திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, எனது தமிழ் சகோதர, சகோதரிகளே, வணக்கம் என தமிழில் கூறி தனது உரையைத் தொடங்கினார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:''கன்னியாகுமரி - காஷ்மீர் வரை நான் மேற்கொண்ட யாத்திரையில் பல நினைவுகள் எனக்குள் உள்ளன. இந்தப் பயணங்கள் பாரதத்தின் பன்முகத்தன்மையை புரிந்துகொள்ளும் வாய்ப்பை எனக்கு அளித்தது. இதனால் தமிழ் மீதான அன்பு மேலும் மேலும் பெருகியது.இந்தியாவை அதிகம் சுற்றிப்பாருங்கள். இந்தியாவின் எந்த பாகத்துக்குச் சென்றாலும் தமிழ் பாரம்பரியம், கலாசாரம், மரபு, இலக்கியம் ஆகியவற்றை சுமந்து செல்லுங்கள். அங்கு இருக்கும் வேறுபட்ட பின்புலத்தை சேர்ந்தவர்களிடம் தமிழைப் பற்றி பகிர்ந்துகொள்ளுங்கள். மாணவர்களின் பளிச்சிடும் கண்களில் நாட்டின் எதிர்காலம் தெரிகிறது. மகாகவி பாரதியார் வாழ்க்கையில் காசிக்கு மிகப்பெரிய பங்களிப்பு உள்ளது. இன்றளவும் காசி மக்கள் பாரதியார் குறித்துப் பேசுகின்றனர். ஏனென்றால் அவரிடம் இருந்த தேசபக்தி அவரை இந்த அளவுக்கு கொண்டு சேர்த்திருக்கிறது. அவரின் அச்சமில்லை அச்சமில்லை என்ற பாடல் உத்வேகம் அளிக்கிறது. சிறிய பங்களிப்பிலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தலாம். இன்று இந்த தருணத்தில் திருவள்ளுவரை நினைவுகூர்கிறேன். அவர் மாணவர்களுக்கு உகந்த அறிவுரைகளை விட்டுச்சென்றிருக்கிறார். ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கு ரஷிய மொழிபெயர்ப்பு திருக்குறளை பரிசாக வழங்கினேன். வாழ்க்கை முழுவதுமே கற்க விரும்புவோருக்கு திருக்குறள் சிறந்த வழிகாட்டி'' எனப் பேசினார். மெட்ரோவில் பயணித்த பிரதமர் மோடி, முதல்வர் விஜய்!Prime Minister Modi delivered a speech quoting Thiruvalluvar and Bharathiyar!