பிரஹார் படத்துக்காக கடுமையான போர் பயிற்சிகளை எடுத்துக் கொண்ட நடிகர் நானா படேகர், பிறகு கார்கில் போரின்போது சுமார் 60 நாள்களுக்கும் மேலாக இந்திய ராணுவத்தில் இணைந்து பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.பிரபல பாலிவுட் நடிகரான நானா படேகர், மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 75. கோவாவில் உள்ள அவரது வீட்டில், சுய நினைவிழந்து, மயங்கிய நிலையில் இருந்த நானா படேகர், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரைப் பிரபலங்களும் முக்கிய தலைவர்களும் நானா படேகர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில், நானா படேகர் குறித்த ஒரு நினைவுச் செய்தி வெளியாகியிருக்கிறது. அவர் 1999ஆம் ஆண்டு கார்கில் போரின்போது சுமார் 60 நாள்கள் இந்திய ராணுவத்துடன் இணைந்து பணியாற்றியது தெரிய வந்துள்ளது.பிரஹார் திரைப்படத்துக்காக, தான் ராணுவத்தில் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டிருந்ததாகவும், மிகச் சிறந்த துப்பாக்கிச் சுடும் வீரராகத் திகழ்ந்ததாகவும் கூறயிருக்கிறார்.கடந்த 2024ஆம் ஆண்டு ஊடகம் ஒன்றுக்கு நானா படேகர் அளித்த நேர்காணலில், ராணுவத்தில் பணியாற்றிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.அதாவது, படத்துக்காக கடுமையான ராணுவ பயிற்சிகளை பெற்றிருந்தேன். கார்கில் போர் நடந்த போது, ராணுவத்துடன் இணைந்து பணியாற்ற விரும்பினேன். முதலில் அனுமதி கிடைக்கவில்லை. பிறகு அப்போது மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த ஜார்ஜ் ஃபெர்னான்டஸை அணுகினேன்.அவர் முதலில், மக்கள் சாதாரணமாக ராணுவத்தில் இணைந்துவிட முடியாது என்பதை சுட்டிக்காட்டினார். பிறகு தான் படத்துக்காக ராணுவப் பயிற்சியை முடித்திருப்பதையும், ஆயுதங்களைப் பயன்படுத்த பயிற்சி பெற்றிருப்பதையும் குறிப்பிட்டேன். துப்பாக்கிச் சூடும் போட்டியில் இந்தியா சார்பில் வெளிநாடுகளில் நடந்த போட்டிகளில் வென்றிருப்பதையும் காட்டினேன்.அனைத்தையும் கேட்டு, என்னுடைய ஆர்வம் காரணமாக எப்போது சேர வேண்டும் என்றாலும் இணைந்து கொள்ளுங்கள் என்று அனுமதி வழங்கினார். அடுத்த நாளே நான் ராணுவத்தில் இணைந்தேன். சுமார் 60 நாள்கள் இந்திய ராணுவப் படையுடன் லே, டிராஸ், குப்வாரா, பாரமுல்லா, சோபோர் பகுதிகளில் பணியாற்றினேன்.ராணுவத்தில் சேரும்போது என் உடல் எடை 76 கிலோ, 60 நாள்களுக்கு பிறகு 56 கிலோ இருந்தேன். மிகவும் கடுமையான பணிகளை நமது ராணுவ வீரர்கள் மேற்கொள்கிறார்கள் என்பதை அனுபவப் பூர்வமாக உணர்ந்தேன் என்று குறிப்பிட்டிருந்தார்.நானும் இந்த நாட்டுக்காக ஒரு சிறு துளி கடமையை ஆற்றியிருக்கிறேன் என்று மட்டும் எனக்குத் தோன்றும் என்று நேர்காணலை நிறைவு செய்திருந்தார். Combat training for the movie Prahaar Nana Patekar joined the Army during the Kargil War!