மமிதா பைஜூ மற்றும் சங்கீத் பிரதாப் இணைந்து நடிக்கும் “ஹலோ டியர்” திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பிரேமலு படத்தில் அமல் டேவிஸ் எனும் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகர் சங்கீத் பிரதாப். இவர், நடிகை மமிதா பைஜூ உடன் இணைந்து நடிக்கும் புதிய படம் “ஹலோ டியர்”. அறிமுக இயக்குநர் டினோய் பவுலோஸ் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைக்கின்றார். இந்த நிலையில், “ஹலோ டியர்” திரைப்படம் வரும் 2027 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழுவினர் இன்று (அக்.9) அறிவித்துள்ளனர். முன்னதாக, பிரேமலு படம் மூலம் பிரபலமான மலையாள நடிகர்கள் சங்கீத் பிரதாப் மற்றும் மமிதா பைஜூ தொடர்ந்து வெற்றி படங்களைக் கொடுத்து வருகின்றனர். நடிகை மமிதா பைஜூ, தமிழக முதல்வர் விஜய்யின் “ஜன நாயகன்”, சூர்யாவின் “விஸ்வநாத் அண்ட் சன்ஸ்”, பிரதீப் ரங்கநாதனின் “டியூட்” போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. View this post on Instagram நானி தயாரிப்பில் நிதினின் புதிய பட ரிலீஸ் தேதி!Mamita Baiju and Sangeet Prathap starrer 'My Dear' release date announced.