என் மீது 45 எஃப்.ஐ.ஆர்-கள்! ஒவ்வொன்றும் பதக்கம் போன்றது! ராகுல் காந்தி

Wait 5 sec.

தனக்கு எதிராக 45 முதல் தகவல் அறிக்கைகள் (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை தெரிவித்தார்.இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணையம் அலுவலகம் நோக்கி இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நேற்று பேரணி நடத்தினர்.பேரணி சென்ற எம்.பி.க்களை நீதி ஆயோக் அலுவலகம் வெளியே தில்லி காவல்துறையினர் தடுத்து நிறுத்திய நிலையில், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் அகில இந்திய வானொலி நிலையத்துக்குள் நுழைந்து தர்னாவில் ஈடுபட்டனர்.இதையடுத்து, ராகுல், பிரியங்கா உள்ளிட்டோரை நேற்றிரவு வலுக்கட்டாயமாக கைது செய்த காவல்துறையினர், நள்ளிரவில் விடுவித்தனர்.இந்த நிலையில், அகில இந்திய வானொலி நிலையத்துக்குள் அனுமதியின்றி நுழைந்ததாக ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர் மீது தில்லி காவல்துறையினர் இன்று வழக்குப் பதிவு செய்துள்ளனர்.இதுதொடர்பாக இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் காந்தி தெரிவித்ததாவது:”என் மீது 45 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 100 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஒவ்வொரு முதல் தகவல் அறிக்கையும் எனக்கு ஒரு பதக்கத்தைப் போன்றது” என்றார்.மேலும், நேற்றைய போராட்டம் பற்றி ராகுல் காந்தி பேசியதாவது: “நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் நேற்று மூன்று தேர்தல் ஆணையர்களையும் சந்திக்க விரும்பினோம். ஆனால் அவர்கள் எங்களைச் சந்திக்க மறுத்துவிட்டனர். தில்லி காவல்துறை எங்களைத் தடுத்து நிறுத்தி, அங்குப் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என்று கூறியது.ஜந்தர் - மந்தரில் இன்று போராட்டம் நடத்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அங்கு அமர்ந்து ஞானேஷ் குமார், இந்த நாட்டின் முறையான தேர்தல் ஆணையர் அல்ல என்பதை நாட்டுக்கு அறிவிக்கத் திட்டமிட்டுள்ளோம். மோடி, அமித் ஷா, மோகன் பாகவத் மற்றும் ஞானேஷ் குமார் ஆகியோர் நாட்டின் ஜனநாயகத்தைச் சீர்குலைத்துவிட்டனர். இவர்கள் தேசத்துரோகிகள் ஆவர். அவர்கள் மீது நாங்கள் நடவடிக்கை எடுப்போம். ஞானேஷ் குமார் பதவி விலகியே ஆக வேண்டும்” எனத் தெரிவித்தார்.45 FIRs against me - Each one is like a medal — Rahul Gandhiராகுல், பிரியங்கா மீது தில்லி காவல்துறை வழக்குப்பதிவு!