நடிகர் ரஜினிகாந்த் பேசிய ஜெயிலர் - 2 புரோமோ வெளியாகியுள்ளது. இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் - 2 திரைப்படம் அக்டோபர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதில், ரஜினியுடன் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு உள்பட பலர் நடிக்கின்றனர்.ஜெயிலர் - 2 திரைப்படத்துக்கு தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளது. மேலும், இப்படம் 2.45 மணிநேரம் கால அளவு கொண்ட திரைப்படமாகத் திரைக்கு வருகிறது.இந்த நிலையில், இப்படத்திற்கு இசைவெளியீட்டு விழாவை பெரிதாக நடத்தாமல் படக்குழுவினர் கலந்துகொண்ட சிறப்பு சந்திப்பு நடைபெற்றுள்ளது. இதில், நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் நெல்சன் உள்பட பலரும் கலந்துகொண்டனர். Fun Guaranteed! #Jailer2 Super Show-ku Ready ah? Streaming from October 9, only on @sunnxt@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @vidya_balan @iam_SJSuryah #MithunChakraborty #SurajVenjaramoodu @meramyakrishnan @iYogiBabu @mirnaaofficial @vijaykartikdop @Nirmalcuts @ChethanDsouza @AlwaysJani @KiranDrk @sunilreddy22 #PallaviSingh @valentino_suren @Alagiakoothan #SantoshRaju @kabilanchelliah @kuchirayar73 @RIAZtheboss #Jailer2FromOct15— Sun Pictures (@sunpictures) October 7, 2026 இந்த நிகழ்ச்சி வருகிற அக். 11 ஆம் தேதி மாலை 6.30 - 9.30 மணிவரை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆகவுள்ளது. தற்போது, இதன் புரோமோவை வெளியிட்டுள்ளர். தங்க வீராங்கனை வித்யா ராம்ராஜைப் பாராட்டிய தனுஷ்!A promo for Jailer 2 featuring actor Rajinikanth has been released.