ஜோதிடரும் முதலாளி பாஜக சொல்வதையும்தான் தவெக கேட்கிறது: திமுக விமர்சனம்

Wait 5 sec.

ஜோதிடர் சொல்வதையும் பாஜக சொல்வதையும்தான் தவெக அரசு கேட்பதாகவும், மக்களின் கருத்துகளைக் கண்டுகொள்வதில்லை என்றும் தவெக அரசு மீது திமுக குற்றம் சாட்டியுள்ளது.சென்னையில் செய்தியாளர்களுடன் திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் பேசியதாவது, "தவெக ஆட்சியில் ஒரு நல்ல திட்டங்கள்கூட செயல்படுத்தப்படவில்லை. அவர்கள் அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் எதையுமே அவர்கள் செய்யவில்லை.அவர்கள் பாஜகவின் அடிமைகளாகத்தான் செயல்படுகிறார்கள். திமுகவை திட்டுவதைத் தவிர வேறெதுவும் செய்ய வேண்டாம் என அவர்களிடம் பாஜக கூறியுள்ளது. எல்லாவற்றுக்கும் திமுகவை குறை சொல்கிறார்களே தவிர, இவர்களின் ஆட்சியில் மக்களுக்காக இதைச் செய்திருக்கிறார்கள் என ஒன்றைச் சுட்டிக்காட்ட முடியுமா? எதையும் செய்யவில்லை.தேர்தல் வாக்குறுதிகளில் ஏதேதோ சொன்னார்கள். ஆனால், இன்று விவசாயிகளை வஞ்சிக்கிறார்கள், செவிலியர்கள் தாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் போராட்டம் நடத்தினாலும், அதனைப் பற்றிக் கேட்பதற்குக்கூட இந்த அரசாங்கத்தில் ஆளில்லை. இந்த அரசாங்கத்தின் நோக்கம் - மக்களுக்கு நன்மை செய்வது அல்ல. தங்களுடைய முதலாளிக்குச் (பாஜக) சேவை செய்வதுதான் இந்த அரசாங்கத்தின் நோக்கம். அடிமைச் சேவையைத்தான் இந்த அரசு செய்து கொண்டிருக்கிறது.கடலைப் பார்த்தவாறு அலுவலகம் இருக்க வேண்டும் என அவரின் (விஜய்) ஜோதிடர் சொன்னதற்காக, பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகத்தை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஜோதிடர், முதலாளி பாஜக சொல்வதையெல்லாம் கேட்கின்றனர். ஆனால், தமிழக மக்களுக்கு அவர்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை. மக்களின் கருத்துகளும் அவர்களின் காதுகளில் விழுவதில்லை" என்று தெரிவித்தார்.ஆடிட்டர் தவறுக்காக விஜய்யின் தேர்தல் வெற்றி செல்லாது என அறிவிக்க முடியுமா? உயர்நீதிமன்றம் கேள்விTVK government listens only to what astrologers and the BJP say: DMK