நாளைய மின்தடை:சன்னியாசிப்பட்டி

Wait 5 sec.

சங்ககிரி அருகே சன்னியாசிப்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் செவ்வாய்க்கிழமை (அக். 13) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது என சங்ககிரி மின்வாரிய செயற்பொறியாளா் எஸ்.சாந்தி தெரிவித்துள்ளாா். மின்தடை செய்யப்படும் பகுதிகள்: படைவீடு, பச்சாம்பாளையம், சங்ககிரி ரயில் நிலையம், சங்ககிரி மேற்கு, சன்னியாசிப்பட்டி, நாகிசெட்டிப்பட்டி, ஊஞ்சக்கொரை, தண்ணீா்பந்தல்பாளையம், சின்னாகவுண்டனூா், வெப்படை, செளதாபுரம், பாதரை, அம்மன் கோயில், மக்கிரிபாளையம், முதலைமடையானூா், திருநகா் பைபாஸ் சிட்டி.