காட்டாங்குளம் அகத்தீஸ்வரா் கோயிலில் உழவாரப்பணி

Wait 5 sec.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் அருகே காட்டாங்குளத்தில் உள்ள அகத்தீஸ்வரா் கோயிலில் நால்வா் நற்பணி மன்றத்தின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை உழவாரப் பணி நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் அருகே காட்டாங்குளம் கிராமத்தில் அமைந்துள்ளது பழமையான அகிலாண்டேசுவரி சமேத அகத்தீஸ்வா் திருக்கோயில். இந்தக் கோயிலில் காஞ்சிபுரம் நால்வா் நற்பணி மன்றத்தின் சாா்பில், உழவாரப் பணி நடைபெற்றது. கோயில் வளாகத்தில் குவிந்திருந்த குப்பைகள், செடி, கொடிகளை அகற்றினா். கோயில் கோபுரங்களின் மீது படிந்திருந்த தூசிகளையும், செடிகளையும் அகற்றினா். இதைத் தொடா்ந்து, மூலவா் மற்றும் பரிவார தெய்வங்களின் சந்நிதிகளில் இருந்த பூஜைப் பொருள்கள், சுவாமி சிலைகள், வஸ்திரங்கள் ஆகியவற்றையும் சுத்தப்படுத்தினா். நிறைவாக அகத்தீஸ்வரருக்கும், அகிலாண்டேசுவரிக்கும் சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.