யுபிஐ பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் முறையை பண்டிகை காலம் முடியும் வரை ஒத்திவைக்கப்படுவதாக இந்திய தேசிய பணப் பரிவா்த்தனை நிறுவனம் அறிவித்துள்ளது.நாடு முழுவதும் யுபிஐ அல்லது டெபிட் கார்டுகள் மூலம் ரூ. 2,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவா்த்தனைகளுக்கு 0.4 சதவிகிதம் எம்டிஆா் வசூலிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சகம் அறிவித்திருந்தது.அதன்படி, ரூ. 2000க்கும் மேல் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது 0.4 சதவிகிதம் கட்டணம் செலுத்த வேண்டும். உதாரணமாக ஒருவர் ரூ. 3000 பொருள் அல்லது சேவை பெறும்போது, அந்தத் தொகை யுபிஐ மூலம் செலுத்தினால், அதற்கு வணிகர் ரூ. 12 கூடுதல் கட்டணமாக செலுத்த வேண்டியது வரும். ஒரு வேளை ரூ. 50 ஆயிரத்துக்கு பொருள்கள் வாங்கினால் அதற்கு வணிகர் ரூ. 200 கட்டணமாக செலுத்துவார். ரூ. 75,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவா்த்தனைகளுக்கு ரூ. 300 உச்சவரம்பு கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த புதிய நடைமுறை வருகின்ற அக்டோபர் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று இந்திய தேசிய பணப் பரிவா்த்தனை நிறுவனம் அறிவித்திருந்தது.இதனிடையே, ஆயுதப்பூஜை, தசரா, தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகைகள் வரும் நிலையில், யுபிஐ பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் முறை அமலுக்கு வந்தால், பெருமளவில் இழப்பு ஏற்படும் என்று வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஏற்கெனவே, விலைவாசி உயர்வு, பணவீக்கம் போன்றவற்றால் நாடு முழுவதும் வழக்கமான வணிகம் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் சூழலில், பண்டிகை காலம் முடியும் வரை யுபிஐ கட்டண முறையை ஒத்திவைக்க மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.இந்த நிலையில், தீபாவளி பண்டிகை முடியும் வரை யுபிஐ பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்தப் போவதில்லை என்றும், புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.UPI MDR on Select Merchant Transactions Shall be Implemented Post Diwaliமின் தடை, ஒரு யூனிட் ரூ.35, தனியாரிடம் மின் கொள்முதல்! அமைச்சர் நிர்மல் குமாரிடம் சரமாரிக் கேள்வி