புதிய கோணத்தில் எடுக்கப்பட்டுள்ள லவ் ஆல்வேஸ் இணையத் தொடர்!

Wait 5 sec.

கெளரி கிஷனின் லவ் ஆல்வேஸ் இணையத் தொடரின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.கொரி​ய​ இணையத் தொடரான, ஹியர் வி கோ அகைன் என்ற ​தொடரைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள தொடர் லவ் ஆல்​வேஸ். இதில் கெளரி கிஷன் பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார்.இந்தத் தொடரை 'வல்லமை தாராயோ', 'கே.டி என்கிற கருப்புதுரை' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் மதுமிதா இயக்கியுள்ளார். மேலும் இந்தத் தொடரில், ரம்ஜான் முகமது, ஜெயபிரகாஷ், ஜெயசுதா மற்றும் மாயா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனனர். லவ் ஆல்வேஸ் தொடர் அக். 30 ஆம் தேதி வெளியாகிறது.காதல், குடும்பம் மற்றும் நகைச்சுவை கலந்து எடுக்கப்பட்டுள்ள இந்தத் தொடர், வயது பின்னோக்கிச் செல்லும் கற்பனைக் கதையாக உருவாகியுள்ளது.பிரிவதற்கு தயாராக இருக்கும் வயதான தம்பதியினர், திடீர் திருப்பத்தால் தங்களின் 20 வயது இளமைக் காலத்துக்குச் சென்று, தங்களை பரிசோதிக்கும் கதையாக இந்தத் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது.புதிய கோணத்​தில், தலா 30 நிமிடங்கள் கொண்ட 8 எபிசோடுகள் அடங்கிய லவ் ஆல்வேஸ் இணையத் தொடர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, மராத்தி மற்றும் பெங்காலி மொழிகளில் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளது.The release date for Gouri Kishan web series Love Always has been announcedஊர்வசியின் ஆஷா படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி!