ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 700 தீபாவளி மளிகை தொகுப்பு! புதுவை அரசு

Wait 5 sec.

புதுவையில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு ரூ. 700 மதிப்புள்ள மளிகை பொருள்கள் தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் வருகின்ற நவம்பர் 8 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.இந்த நிலையில், புதுவையில் உள்ள 3 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் ரூ. 700 மதிப்புள்ள மளிகை பொருள்கள் தொகுப்பு வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் சிவக்கொழுந்து அறிவித்துள்ளார்.அந்த தீபாவளி மளிகை தொகுப்பில், சமையல் எண்ணெய் 2 லிட்டர், சர்க்கரை 2 கிலோ, கடலைப் பருப்பு ஒரு கிலோ, ரவை அரை கிலோ, மைதா அரை கிலோ இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்தாண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புதுவை அரசு சார்பில் மளிகை பொருள்கள் தொகுப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.Rs. 700 Diwali grocery kit for ration cardholders : Puducherry Governmentமின் தடை, ஒரு யூனிட் ரூ.35, தனியாரிடம் மின் கொள்முதல்! அமைச்சர் நிர்மல் குமாரிடம் சரமாரிக் கேள்வி