ஐபிஎஸ் அதிகாரியிலிருந்து அரசியல்வாதி வரை - அண்ணாமலையின் பயணம் எப்படிப்பட்டது?

Wait 5 sec.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை, பாஜக மாநிலத்தலைவராக மேற்கொண்ட நடவடிக்கைகளால், அக்கட்சிக்கு தமிழகத்தில் கிடைத்த உத்வேகம் பெரும் கவனம் ஈர்த்து வந்த நிலையில், அவர் அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அவரின் விருப்பத்துக்கு மாறாக, சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்ததும் விமர்சிக்கப்பட்டது. தேர்தலில் அந்த கூட்டணி தோல்வியடைந்த நிலையில், அவர் தனிக்கட்சி துவங்கவிருப்பதாகப் பரவி வரும் தகவல் அவரை நோக்கி தமிழக அரசியலை திசை திருப்பியுள்ளது.