இந்தியாவில் மே மாதத்தில் 10 நாட்களுக்குள்ளாக பெட்ரோல், டீசல் விலை 4 முறை உயர்த்தப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் தினசரி பல கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்குவதாக மத்திய அமைச்சர் கூறிய நிலையில், அந்நிறுவனங்களின் காலாண்டு அறிக்கை அவை லாபத்தில் இயங்குவதை உறுதிப்படுத்தியுள்ளன. அப்படியென்றால், பெட்ரோல், டீசல் விலையேற்றம் ஏன்?