நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள 'தேசி பிளிங்' (Desi Bling) என்ற புதிய ரியாலிட்டி ஷோவின் தொடக்கத்திலேயே இந்த காட்சி இடம்பெறுகிறது. இதில், துபாயில் வசிக்கும் இந்திய கோடீஸ்வர தொழிலதிபர் சதீஷ் சன்பால், தனது மனைவி தபிந்தாவிடம் காலை வேளையில் பாத மசாஜ் செய்துகொள்ளும் காட்சி பார்வையாளர்களை அதிர்ச்சியில் உறைய வைக்கிறது.