இந்த சீசனை சற்று மெதுவாகவே தொடங்கியிருந்தது குஜராத் டைட்டன்ஸ். முதல் 7 போட்டிகளில் மூன்றில் மட்டுமே வென்றிருந்தது அந்த அணி. ஆனால், அதன்பிறகு பெரும் எழுச்சி கண்ட அந்த அணி, கடைசி 7 லீக் போட்டிகளில் ஆறு வெற்றிகளைப் பெற்றது. நெட் ரன்ரேட் பல அணிகளின் இடத்தை நிர்ணயித்த நிலையில், லீக் சுற்றில் அவர்கள் பெற்ற கடைசி 3 வெற்றிகளுமே 70 ரன்களுக்கும் மேல் வந்தவை.