ரஸ்ஸல் பிராண்ட் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் நிரூபணம்..! சிறை தண்டனை உறுதி!

Wait 5 sec.

பிரிட்டனைச் சேர்ந்த நடிகர் ரஸ்ஸல் பிராண்ட் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் உறுதிசெய்யப்பட்டுள்ளன. இதற்காக அவருக்கு சிறைத்தண்டனை கிடைக்குமென நீதிபதி தெரிவித்துள்ளார். பிரபல பாப் பாடகி கேட்டி பெர்ரியின் முன்னாள் கணவரான ரஸ்ஸல் பிராண்ட் 1999 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இவர் இந்தக் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்.1999 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் தெற்கு கடற்கரையில் உள்ள போர்ன்மவுத் பகுதியில் ஒரு பெண்ணையும், 2004 ஆம் ஆண்டு லண்டனின் மத்திய வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் ஒரு பெண்ணையும் பாலியல் வன்கொடுமை செய்ததாக பிராண்ட் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.மேலும், 2001 ஆம் ஆண்டு ஒரு பெண்ணை தாக்கியதாகவும், 2004 மற்றும் 2005 க்கு இடையில் மற்றொரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இதுதொடர்பாக வியாழக்கிழமை சவுத்வார்க் கிரவுன் நீதிமன்றத்தில் 8.30 மணி நேரம் விசாரணை நடைபெற்றுள்ளது. அதில் ரஸ்ஸல் பிராண்ட் திட்டமிட்டே இந்தக் குற்றச் சம்பவங்களை அரங்கேற்றியுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. சவுத்வார்க் கிரவுன் நீதிபதி ஜோயல் பென்னதன் இது குறித்து கூறியிருப்பதாவது: குற்றம்சாட்டப்பட்டவர் மிகவும் கொடூரமாகவும் திட்டமிட்டும் பாலியல் வன்கொடுமைகளை நிகழ்த்தியுள்ளார். இதற்காக அவருக்கு கடுமையான சிறைத்தண்டனை அளிக்கப்படும் எனக் கூறியுள்ளார். வரும் திங்கள் கிழமை அவருக்கான தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது புகழ், செல்வாக்கினை பயன்படுத்தி இந்தக் கொடுமைகளை ரஸ்ஸல் பிராண்ட் செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். British Actor and comedian Russell Brand found guilty of rape and sexual assault