தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள பாக்கெட் நாவல் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் பொங்கள் விழாவை முன்னிட்டு வெளியாகவிருக்கிறது. நடிகர் விஜய்சேதுபதி நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. ஏற்கெனவே, சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு தேசிய விருது பெற்ற இந்தக் கூட்டணியில் உருவாகியுள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.டைலர் டர்டன் மற்றும் கினோ ஃபிஸ்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் மாளவிகா மோகனன், ராஜ் பி ஷெட்டி, கிஷோர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முன்னதாக இளையராஜா இசையில் உருவாக இருந்தது. கருத்து வேறுபாட்டால் பிரிந்ததாக தகவல்கள் வெளியான நிலையில் பின்னர் ஜிவி பிரகாஷ் இசையமைப்பார் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், படம் பொங்கலை முன்னிட்டு ஜன.14ஆம் தேதி உலகம் எங்கும் வெளியாக இருக்கிறதாக படக்குழு அறிவித்துள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகி வரும் பாக்கெட் நாவல் படம் ஜப்பானிய மொழியிலும் வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.The date is set for Thiagarajan Kumararaja’s #PocketNovel. Pages are turning this Pongal #PocketNovelTheFilm#ThiagarajanKumararaja @VijaySethuOffl @MalavikaM_ @gvprakash @RajbShettyOMK #ActorKishore @dhilipaction @tylerdurdenand1 #NiravShah @andrewxvasanth pic.twitter.com/FkHW11pXOL— Tyler Durden And Kino Fist (@tylerdurdenand1) November 6, 2026உங்களை நினைத்து பெருமையாக இருக்கிறது ரன்பீர்... ஆலியா பட் நெகிழ்ச்சி!Release date announced for Vijay Sethupathi Thiagarajan Kumararaja 'Pocket Novel'!