வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக கொச்சியில் நாளை போராட்டம் நடத்தவிருப்பதாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் அறிவித்துள்ளனர்.வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடவடிக்கையில் முறைகேடு நடந்ததாகக் கூறி தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.ஞானேஷ் குமாருக்கு எதிராக காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் போராட்டம் நடத்தினர். தீபாவளி திருநாளையொட்டி நவ. 8 வரையில் போராட்டங்கள் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் போராட்டங்கள் நடத்தப்படாது என்றும் அறிவித்தனர்.இதனிடையே, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்திய ஜந்தர் மந்தர் பகுதியை போராட்டம் நடத்துவதற்கான இடங்களில் இருந்து தில்லி காவல்துறை நீக்கியது.இந்த நிலையில், கேரள மாநிலம் கொச்சியில் ஞானேஷ் குமார், எஸ்ஐஆருக்கு எதிராக நாளை (நவ. 7) போராட்டம் நடத்தப்படுவதாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் அறிவித்துள்ளனர். இந்தப் போராட்டத்தில் அமைப்பின் நிறுவனர் அபிஜித் தீப்கே கலந்து கொள்கிறார்.தீபாவளி திருநாள் வரையில் போராட்டம் நடத்தப் போவதில்லை என்று கூறிய நிலையில், தீபாவளிக்கு முந்தைய நாளில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.திரையரங்குகளில் காலை 6 மணிக்கு வெளியான சீன், மூக்குத்தி அம்மன் 2!Cockroach Janta Party announces new anti-SIR protest in Kochi on Nov 7