தவெக ஆட்சியைக் கவிழ்க்க ரூ. 30 கோடி பேரம்: மதுரை எம்எல்ஏ முஸ்தபா புகார்

Wait 5 sec.

தவெக ஆட்சியைக் கவிழ்க்க தன்னிடம் பேரம் பேசப்பட்டதாக காவல்துறையில் தவெக எம்எல்ஏ முஸ்தபா புகார் அளித்துள்ளார்.தவெக ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முயற்சித்து வருவதாக தவெக அமைச்சர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். முன்னதாக திமுகவில் இணைய பேரம் பேசிப்பட்டதாக திமுகவினர் மீது ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணன் புகார் அளித்திருந்தார்.இந்த நிலையில், தவெக ஆட்சியைக் கவிழ்க்க பேரம் பேசப்பட்டதாக மதுரை மத்திய தொகுதி தவெக எம்எல்ஏ முஸ்தபாவும் புகார் அளித்துள்ளார்.தவெக ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக தன்னிடம் ரூ. 30 கோடி பேரம் பேசப்பட்டதாக மதுரை முன்னாள் துணை மேயர் மன்னன் மீது எம்எல்ஏ முஸ்தபா புகார் அளித்துள்ளார். புகார் அளிக்கப்பட்டுள்ள மன்னன், சமீபத்தில்தான் அதிமுகவில் இணைந்தார்.ஆட்சியைக் கவிழ்க்க தன்னிடம் பேரம் பேசப்பட்டதாக மதுரை மத்திய குற்றப்பிரிவில் எம்எல்ஏ முஸ்தபா புகார் அளித்துள்ள நிலையில், மன்னனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.தவெக ஆட்சியைக் கவிழ்க்க முயற்சிப்பதாக அமைச்சா் நிா்மல்குமாா் கூறுவது வேடிக்கை: நயினாா் நாகேந்திரன்TVK MLA Mustafa alleges that he was approached with an offer to topple the TVK government