தேவையான பொருள்கள்:கேழ்வரகு மாவு - 2 கிண்ணம்வேர்க்கடலை, பொட்டுக்கடலை - கால் கிண்ணம்எண்ணெய் , உப்பு- தேவையான அளவு மிளகாய்த்தூள் -4 தேக்கரண்டி செய்முறை:கேழ்வரகு மாவில் தேவையான உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து தண்ணீர் விட்டு முறுக்கு மாவு பதத்தில் கெட்டியாகப் பிசையவும். அந்த மாவை மிக்சர் பிழியும் அச்சில் போட்டு, காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இதனுடன் வறுத்து வேர்க்கடலை, பொட்டுக்கடலையை வறுத்து போடவும். எண்ணெயில் பொரித்த அவலை வறுத்து போடவும். ஒன்றாகச் சேர்த்துக் கிளறினால், கேழ்வரகு மிக்சர் தயார்.நாகஜோதி கிருஷ்ணன்