சிரி... சிரி... | 08-11-2026

Wait 5 sec.

'எவ்வளவு பெரிய மேட்டரா இருந்தாலும் தலைவர் அதை ரொம்ப லைட்டா எடுத்துக்குவார்!' 'எப்படிச் சொல்றே?''குற்றப் பத்திரிகையை வாங்கி வச்சிக்கிட்டு, 'சி.பி.ஐ.காரங்க, பத்திரிகை வச்சிட்டுப் போறாங்க'ன்னு சிரித்தபடி சொன்னாரே!'-வி.ரேவதி, தஞ்சை. 'ஏன்யா வீட்டுக்குள்ளே ஆட்டம் பாமை வெடிச்ச?''நீங்கதானே வீடு மொத்தமா விழுந்த அப்புறம் புதுசா கட்டித் தர்றேன்னு சொன்னீங்க!'-தீபிகா சாரதி, சென்னை.'நாய் வளர்க்காமலேயே 'நாய் ஜாக்கிரதை' போர்டு மாட்டி இருக்கீங்களே?' 'நான் நாய் வளர்க்கலைன்னு உங்களுக்குத் தெரியும்... திருடனுக்குத் தெரியாதே!'-பர்வீன் யூனுஸ், சென்னை.'உன்னைக் காதலிக்கிறதா சொல்லி ஒருத்தன் ஒத்தக் காலில் நின்னானே, அவன் என்ன ஆனான்?''சொந்தமா யோகா கிளாஸ் ஆரம்பிச்சிட்டான்!'-எம்.பி.தினேஷ், இடையர்பாளையம்.'எங்க பெண்ணை நாங்க தங்கத் தட்டில் வச்சு தாங்கறோம்...''சீர்ல அந்தத் தட்டைக் கொடுங்க... நாங்களும் தாங்கறோம்!'- பர்வதவர்த்தினி, பம்மல்.