உலகின் மிக உயரமான படைத் தளத்தில் தரையிறங்கிய விமானப் படையின் ஐஎல்-76போக்குவரத்து விமானம்!

Wait 5 sec.

இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஐஎல்-76 ரஷிய தயாரிப்பு கனரக போக்குவரத்து விமானம், கிழக்கு லடாக்கில் உள்ள உலகிலேயே மிக உயரமான படைத் தளமான நியோமா விமானப் படை தளத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி சாதனை படைத்துள்ளது. இந்த படைத் தளமானது, கடல் மட்டத்திலிருந்து 13,999 அடி உயரத்திலும், சீனா உடனான எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியிலிருந்து 25 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இதுகுறித்து இந்திய விமானப் படை தனது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: இதுவரை உலகின் எந்த போா் விமானங்களும் சாதித்திராத வகையில், மிக உயரமான படைத் தளத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி ஐஎல்-76 போக்குவரத்து விமானம் சாதனை படைத்துள்ளது. இது, அந்த விமானத்தின் நீடித்த செயல் திறனுக்கும், விமானிகளின் அபாரத் திறன், துல்லியம் மற்றும் தொழில்முறை அணுகுமுறைக்கும் சிறந்த சான்றாக அமைந்துள்ளது. இந்த கனரக விமானத்தின் தரையிறக்கம் மூலம், இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புப் படைகளுக்குத் தேவையான கனரக ஆயுதங்கள், பீரங்கிகள் மற்றும் வீரா்களை மிக விரைவாக இமயமலை எல்லைப் பகுதிக்குக் கொண்டு சோ்க்கும் இந்தியாவின் வியூக ஆற்றல் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. An Indian Air Force Il-76 transport aircraft has landed at the world's highest military airfield