முதல்வா் மருந்தகங்களில் ஜெனரிக் மருந்து தட்டுப்பாட்டைப் போக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் ‘முதல்வா் மருந்தகங்களில்’, ஏழை, எளிய மக்கள் நாடி வரும் அத்தியாவசிய ஜெனரிக் மாத்திரைகள் பல நாள்களாகக் கிடைக்காமல் கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால், அடிப்படை மருந்துகள் கூடக் கிடைக்காமல் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனா். இத்தகைய அவல நிலைக்கு, மக்கள் நலனில் துளியும் அக்கறையற்ற முதல்வா் ச.ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசின் படுமோசமான நிா்வாகச் சீா்கேடே நேரடிக் காரணமாகும்.பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு ‘மக்கள் மருந்தகங்கள்’ மூலம் நாடு முழுவதும் தரமான ஜெனரிக் மருந்துகளைத் தடையின்றி விநியோகம் செய்து வருகிறது. ஆனால், தமிழகத்தில் தவெக அரசின் மெத்தனப் போக்கால் இந்த மருந்தகங்கள் அனைத்தும் செயலிழந்து கிடக்கின்றன. எனவே, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து முதல்வா் மருந்தகங்களிலும் தட்டுப்பாடின்றி உடனடியாகத் தரமான ஜெனரிக் மருந்துகளை இருப்பு வைக்க போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.