மது போதையில் தொழிலாளியை கொலை செய்ய முயற்சி:  15 வயது சிறுவன் காப்பகத்தில் சேர்ப்பு

Wait 5 sec.

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மது போதையில் தொழிலாளியை வெட்டிக் கொலை செய்ய முயன்ற, 15 வயது சிறுவனை வாழப்பாடி போலீசார் கைது செய்து காப்பகத்தில் சேர்த்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சேலம் மாவட்டம் வேப்பிலைப்பட்டி கந்தன்பிள்ளையார் கோயில் பெருமாள் கரடு பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி காசி(35). குடும்பம் இல்லாததால் தனியாக வசித்து வந்த இவருக்கு, கேரளாவில் இருந்து பாட்டி வீட்டிற்கு வந்திருந்த 15 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாலை தீபாவளி பண்டிகையை கொண்டாட தொழிலாளி காசி, 15 வயது சிறுவனுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்.அப்போது, காசி சிறுவனைத் திட்டியதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த 15 வயது சிறுவன் காசியை கொடுவாளால் வெட்டிக் கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த தொழிலாளி காசி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாழப்பாடி போலீசார், மது போதையில் தொழிலாளியை வெட்டிக் கொலை செய்ய முயற்சித்த 15 வயது சிறுவனை பிடித்து சேலத்தில் உள்ள காப்பகத்தில் சேர்த்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சிறுவன் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து திங்கட்கிழமை அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் வாழப்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Attempted to hack a worker to death while under the influence of alcohol, near Vazhapadiதேனியில் சிறப்பு சார்பு ஆய்வாளர் கொலை வழக்கில் 3 பேர் கைது