தங்கம் விலை வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை(நவ.9) மீண்டும் கணிசமான உயர்வைக் கண்டு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.22 காரட் தங்கம் விலைஇதன்படி, சென்னையில் இன்று(நவ.9) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,255-க்கும், சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் தங்கம் விலைஅதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,850-க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.86,160க்கும் விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலைதங்கத்தின் விலை உயர்ந்துள்ள போதிலும், வெள்ளியின் விலையில் மாற்றம் ஏதுமின்றித் தொடர்கிறது. இதைத்தொடர்ந்து வெள்ளி விலை கிராம் ஒன்று ரூ.205க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 5 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தை மாற்றங்கள் மற்றும் உள்நாட்டுத் தேவையின் அடிப்படையில் சென்னை வர்த்தகச் சந்தையில் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம் மீண்டும் அதிகரித்துள்ளது. தங்கம் விலை கணிசமாகக் குறைந்து வந்த நிலையில், கடந்த சில நாள்களாக மீண்டும் உயர்வைக் கண்டிருப்பது நகை பிரியர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.Gold price hike: Nov.9 statusமது போதையில் தொழிலாளியை கொலை செய்ய முயற்சி: 15 வயது சிறுவன் காப்பகத்தில் சேர்ப்பு