543 புற்றுநோய் மருந்துகளின் திருத்தப்பட்ட புதிய விலைப் பட்டியல் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.நாட்டில் புற்றுநோய் மருந்துகளின் விலையை 30% லாப வரம்புக்குள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.இதனைத் தொடர்ந்து, பல்வேறு வணிகப் பெயா்களில் (பிராண்ட்) விற்பனை செய்யப்படும் 543 புற்றுநோய் மருந்துகளின் திருத்தப்பட்ட அதிகபட்ச சில்லறை விற்பனை விலை (எம்ஆா்பி) பட்டியலை, தேசிய மருந்து விலை நிா்ணயம் கடந்த வாரம் வெளியிட்டது.இதில், நோயாளிகள் அதிகளவில் பயன்படுத்தக் கூடிய, மார்பக புற்றுநோய்க்கான பால்போசிக்லிப் (Palbociclib) மருந்தின் விலை ரூ. 40,421-லிருந்து ரூ. 2,720 ஆகவும், தியோடெபா (Thiotepa) என்ற கீமோதெரபி ஊசியின் விலை ரூ. 80,072-லிருந்து ரூ. 7,150 ஆகவும் பல மடங்கு குறைக்கப்பட்டுள்ளது.மருந்துகள் விலைரத்தப் புற்றுநோய்க்கான டசாடினிப் (Dasatinib) - பழைய விலை ரூ. 17,811; புதிய விலை ரூ. ரூ.1,808.தியோடெபா (Thiotepa) என்ற கீமோதெரபி ஊசி - பழைய விலை ரூ. 80,072; புதிய விலை ரூ. 7,150பெர்டுசுமாப் (Pertuzumab) என்ற புற்றுநோய் ஊசி - பழைய விலை ரூ. 94,951; புதிய விலை ரூ. 30,593அனஸ்ட்ரோசோல் (Anastrozole) - பழைய விலை ரூ. 695; புதிய விலை ரூ. 73அசாசிடிடின் (Azacitidine) - பழைய விலை ரூ. 6,337; புதிய விலை ரூ. 1,495.04பெவாசிரிசுமாப் (Bevacizumab) - பழைய விலை ரூ. 21,767.70; புதிய விலை ரூ. 5,930.13டசாடினிப் (Dasatinib) - பழைய விலை ரூ. 2,812.50; புதிய விலை ரூ. 1,085.93டெனோசுமாப் (Denosumab) - பழைய விலை ரூ. 22,031.25; புதிய விலை ரூ. 5,941என்சாலுடாமைட் (Enzalutamide) - பழைய விலை ரூ. 6,578.20; புதிய விலை ரூ. 2,232எர்லோட்டினிப் (Erlotinib) - பழைய விலை ரூ. 4,637.45; புதிய விலை ரூ. 2,008ஃபுளுடராபின் (Fludarabine) - பழைய விலை ரூ. 14,235; புதிய விலை ரூ. 2,432ஃபுல்வெஸ்ட்ரான்ட் (Fulvestrant) - பழைய விலை ரூ. 26,072.16; புதிய விலை ரூ. 5,491இந்த நிலையில், நாடு முழுவதும் திருத்தப்பட்ட புதிய விலை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.இந்த விலை குறைப்பு மூலம் ஆண்டுக்கு ரூ. 3,540 கோடி நோயாளிகளின் செலவீனம் குறையும் என்று தேசிய மருந்து விலை நிா்ணயம் ஆணையம் தெரிவித்துள்ளது.மேலும், புற்றுநோய் மருந்துகளை வாங்குவதற்கு முன்னதாக, பார்மா சாஹி தாம் (Pharma Sahi Daam) செயலி மூலமாகவோ, அல்லது nppa.gov.in இணையதளம் மூலமாகவோ சரிபார்த்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஒருவேளை செயலியில் குறிப்பிட்ட தொகையைவிட அதிக விலைக்கு மருந்துகளை விற்பனை செய்தால், 1800-111-255 என்ற எண்ணிலோ அல்லது செயலி மூலமோ புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மற்றும் காப்புரிமை பெற்ற மருந்துகளின் (Keytruda, Imjudo, Opdivo) விலையில் எந்த மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.Cancer drugs! Reduced price list now in effect!தீபாவளியில் 9-வது கொலை! சென்னையில் இளைஞர் வெட்டிக் கொலை!