இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக்கை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க யஷார் கட்சித் தலைவர் காடி ஐசென்கோட் உரிமை கோரினார்.இஸ்ரேலில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான லிகுட் கட்சியின் கூட்டணி 53 இடங்களில் மட்டுமே வென்றன.அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் ராணுவத் தளபதி காடி ஐசென்கோட் கூட்டணி 48 இடங்களையும், முதல்முறையாக அரபு கட்சிகள் 19 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. 120 இடங்களைக் கொண்ட இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில், பெரும்பான்மைக்குத் தேவையான 61 இடங்களை எந்தவொரு கட்சியும் கைப்பற்றவில்லை. இதனால், அரபு கட்சிகள் கிங் மேக்கர்களாக உருவாகின.இதனைத் தொடர்ந்து, புதிய ஆட்சி அமைப்பது குறித்து இஸ்ரேலிய அதிபர் ஹெர்சாக் உடனான சந்திப்பில் ஐசென்கோட் தலைமையிலான ஆட்சி அமைவதற்கு அரபு கட்சிகளின் கூட்டணி ஆதரவளித்தன. இதனால், அவருக்கு ஆதரவு அளிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ளது.இந்த நிலையில், பிரதமராகப் பதவியேற்று புதிய அரசை அமைப்பதற்கு காடி ஐசென்கோட்டுக்கு, கடந்த சனிக்கிழமை (நவ. 7) இரவு அதிபர் ஹெர்சாக் அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து, அதிபர் ஹெர்சாக்கை நேரில் சந்தித்த ஐசென்கோட், ஆட்சி அமைக்க உரிமை கோரி முறைப்படி கடிதம் வழங்கினார்.தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய ஐசென்கோட்,“நாம் ஒரு அவசரகாலச் சூழலில் இருக்கிறோம். இஸ்ரேலுக்கு, சுவாசிப்பதற்கு காற்று எவ்வளவு அவசியமோ, அதே அளவு புதிய தலைமைத்துவமும் தேவைப்படுகிறது.நான் முன்வைத்துள்ள நான்கு கொள்கைகளின் அடிப்படையில், இஸ்ரேலில் ஒரு அவசரகால அரசாங்கத்தை விரைவாக அமைப்பது சாத்தியம் என்றும், அதுவே சரியான நடவடிக்கை என்றும் நான் உறுதியாக நம்புகிறேன். இத்தகைய அரசாங்கம் நெசெட்டில் பெரும் பெரும்பான்மையைக் கொண்டிருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார். Gadi Eizenkot staked a claim to form a government in Israel