தமிழ்நாட்டில் தீபாவளி அன்று 2 சிறுவர்கள் உள்பட 8 பேர் கொலை!

Wait 5 sec.

தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை நாளான நேற்று (நவ. 8) மட்டும் 8 கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளது.நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் 3 ரெளடிகள், 2 சிறுவர்கள், ஒரு இளம் பெண் உள்பட 8 பேர் படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருச்சியில் 3 கொலைகள்திருச்சி சமயபுரத்தில் கூலி வேலை செய்து வந்த 17 வயதான ராகுல் மற்றும் விஷால் ஆகிய இருவரும் நேற்றிரவு வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.முகம் சிதைக்கப்பட்ட நிலையில் விஷாலும், தலையில் பலத்த வெட்டுக் காயங்களுடன் ராகுலும் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். இவர்கள் கொலை முன்விரோதம் காரணமாக நடைபெற்றதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதேபோல், திருச்சி புறத்தாக்குடியில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் கிறிஸ்டோபர் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.கடலூர்கடலூர் பெரிய கட்டுப்பாளையம் பகுதியில் மது அருந்தும்போது நண்பர்களிடையே ஏற்பட்ட வாய்த் தகராறில் ரெளடி பிரிதிவிராஜ் என்பவர் கொலை செய்யப்பட்டார்.இந்த கொலையை ரெளடி அருளரசு மற்றும் அவரது தம்பி அன்பரசன் இணைந்து செய்த நிலையில், பதுங்கியிருந்த அருளரசை காவல்துறையினர் சுட்டுப் பிடித்தனர்.சிவகங்கைசிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் கொலை வழக்கில் சிறையிலிருந்த ரெளடி விக்னேஷ், ஜாமீனில் வெளிவந்த நிலையில் மர்ம நபர்கள் நேற்றிரவு வெட்டி படுகொலை செய்தனர். அவரது நண்பர் முனியாண்டி வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதேபோல், கல்லல் அருகே ரெளடி நவீன் என்பவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், சிவகங்கை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தேனிதேனி சமதர்மபுரம் அருகே காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார், மதுபோதை கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.சாலையை மறித்து பட்டாசு வெடித்து ரீல்ஸ் எடுத்தவர்களை தட்டிக் கேட்ட செந்தில்குமாரை, மதுபோதையில் இருந்த இளைஞர்கள் அடித்துக் கொன்றுள்ளனர்.இந்த வழக்கில் 3 பேரை கைது செய்துள்ள தேனி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.திருவள்ளூர்திருவள்ளூர் மாவட்டம் சென்றான்பாளையம் அருகே ஆந்திரத்தைச் சேர்ந்த மேகலா (வயது 24) என்ற இளம்பெண்ணை பிரசாத் என்பவர் குத்திக் கொலை செய்துள்ளார்.பிரசாத்தை கைது செய்துள்ள பென்னலூர் பேட்டை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.8 murders in Tamil Nadu on Diwali!மானாமதுரை அருகே ஜாமீனில் வந்த ரௌடி வெட்டிக் கொலை