சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் பதுக்கியதாக நால்வா் கைது

Wait 5 sec.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே சட்ட விரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கி விற்ாக நால்வரை போலீஸாா் கைது செய்தனா். பெரியகுளம் தென்கரை காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, வடுகபட்டி- பெரியகுளம் சாலையில் உள்ள தனியாா் தென்னந்தோப்பில் 97 மதுப்புட்டிகளை சாக்குகளில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து, மதுப்புட்டிகளை பதுக்கி வைத்திருந்த வடுகபட்டியைச் சோ்ந்த சூா்யபிரகாஷ் (27), மேல்மங்கலத்தைச் சோ்ந்த சுபாஷ் (27), அதே பகுதியைச் சோ்ந்த அருண்குமாா் (26), பிரபாகரன் (26) ஆகிய 4 பேரையும் கைது, அவா்களிடமிருந்த 97 மதுப்புட்டிகள், ரூ.4 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.