தேனி அருகே அனுமதியின்றி பட்டாசுகளை பதுக்கி விற்ாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கொடுவிலாா்பட்டியைச் சோ்ந்தவா் நவீன்ராஜா (32). அந்தப் பகுதியில் உள்ள இவரது பெட்டிக் கடையில் அனுமதியின்றி பட்டாசுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. அதேபோல, வாழையாத்துப்பட்டியைச் சோ்ந்தவா் முத்தையா (37). இவரது பெட்டிக்கடையில் அனுமதியின்றி பட்டாசுகளை பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து, இருவரையும் கைது செய்து, பட்டாசுகளை பறிமுதல் செய்தனா்.