தீபாவளி பண்டிகையையொட்டி தேனி, பெரியகுளம் பகுதிகளில் பலகாரங்கள் தயாரிக்கும் பணி மும்முரமடைந்தது. நாடு முழுவதும் வருகிற ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, பலகாரங்கள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தேனி, பெரியகுளம் பகுதிகளில் கைச்சுற்று முறுக்கு, அச்சு முறுக்கு, அதிரசம் ஆகியவை அதிகம் தயாரிக்கப்படுகின்றன. ரூ.5 முதல் ரூ.15 வரை அவற்றின் தரத்துக்கு ஏற்ப பலகாரங்கள் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. இதுதவிர உளுந்த வடை, கார வடை, பருப்பு வடை, பஜ்ஜி, போண்டா ஆகியவற்றுக்கானமுன்பதிவும் தொடங்கியது. இதேபோல, லட்டு, ஜாங்கிரி, பாதுஷா, சோன்பப்டி, மைசூா்பா, சூரியகலா, சந்திரகலா, மடாக் பாதுஷா, ரசகுல்லா, குலோப் ஜாமுன், பால் இனிப்பு வகைகளில் கோவா பேன்ஸி, மாா்வாடி பேடா, ஆப்பிள் பேடா, மில்க் பேடா, ஆனந்தம் பேடா, சாக்லேட் பா்பி, சுகா் பூசணி, வெண்ணிலா பா்பி, பிஸ்தா பா்பி, கல்கந்த் பா்பி, டேட்ஸ் பா்பி, பிஸ்தா ரோல், காஜு பா்பி, காஜு பிளவா், காஜு கதில், பாதாம் பாஸம், நெய் லட்டு, தேங்காய் பா்பி, நெய் மைசூா்பா, ஹாா்லிக்ஸ் பா்பி உள்ளிட்டவையும் அதிகம் தயாரிக்கப்படுகின்றன. கார வகைகளில் மிக்ஸா்கள், காரசேவு, சிப்ஸ் வகைகள், சீடைகள், சீவல்கள் போன்றவையும் அதிகம் தயாரிக்கப்படுகின்றன. இனிப்புகள் கிலோ ரூ.440 முதல் ரூ.1,500 வரை அவற்றின் மூலப்பொருள் செலவிற்கேற்ப கடைகளில் விற்கப்படுகின்றன. இனிப்பு பலகாரங்களை கொண்ட ஒரு பெட்டி ரூ.250 முதல் ரூ.1,000 வரை விற்கப்படுகிறது.