மாநில உரிமைகளைப் பாதுகாக்க வேறென்ன திட்டம் இருக்கிறது? முதல்வர் விஜய்க்கு உதயநிதி கேள்வி

Wait 5 sec.

மாநில உரிமைகளைப் பாதுகாக்க வேறென்ன திட்டம் இருக்கிறது? என முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய - மாநில உறவுகளை ஆய்வு செய்வதற்காக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவை முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு கலைத்து உத்தரவிட்டுள்ளது. இதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினும் கடும் கண்டனம் தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்."மத்திய- மாநில அரசுகளின் உறவுகளை ஆராய்வதற்காக நம் திராவிட மாடல் ஆட்சியில் அமைக்கப்பட்ட குழுவை இந்த அரசு கலைத்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். முன்னாள் நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில், நிர்வாக - சட்ட மற்றும் பொருளாதார வல்லுநர்கள் இடம்பெற்றிருந்த இக்குழுவை கலைத்து இருப்பதன் மூலம் இந்த முதல்வர் தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைத்துள்ளார். தமிழ்நாடு சட்ட ஆணையத்தின் பணிகளைக் காரணம் காட்டி, இந்தக்குழுவை ரத்து செய்திருக்கும் இவர்கள், மாநில உரிமைகளைப் பாதுகாக்க வேறென்ன திட்டம் வைத்திருக்கிறார்கள்?ஒன்றிய - மாநில அரசுகளின் உறவுகளை ஆராய்வதற்காக நம் திராவிட மாடல் ஆட்சியில் அமைக்கப்பட்ட குழுவை இந்த சோப்ளாங்கி அரசு கலைத்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.முன்னாள் நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில், நிர்வாக - சட்ட மற்றும் பொருளாதார வல்லுநர்கள் இடம்பெற்றிருந்த இக்குழுவை கலைத்து…— Udhay (@Udhaystalin) November 7, 2026What other plan is there to protect state rights, Udhayanidhi question to CM Vijay கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்துக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு!