சண்டியர் படத்தை கமல் வெளியிடக் கூடாது: கிருஷ்ணசாமி எதிர்ப்பு

Wait 5 sec.

சண்டியர் படத்தை கமல்ஹாசன் வெளியிடக் கூடாது என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.கோவையில் இன்று அவர் அளித்த பேட்டியில்: "ரத்தம் சொட்ட சொட்ட ஒரு விளம்பரத்தை வெளியிட்டு 'சண்டியர்' படம் குறித்து கமல் அறிவித்துள்ளார். பிறந்த நாளில் 'பழிக்கு பழி' வாங்கும் வகையில் கமல் ஆரம்பித்துள்ளார். பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே பெயரை வைத்துள்ளார். கமல்ஹாசன் தற்போது ஒரு அரசியல் கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்.எம்பியாக உள்ள கமல், சாதி மற்றும் மதம் சார்ந்து செயல்படக் கூடாது. தான் எடுத்த உறுதிமொழிக்கு மாறாக அவர் செயல்படுகிறார். 'சண்டியர்' படத்தை கமல் எடுக்கவும் முடியாது, அதைத் தமிழ்நாட்டில் திரையிடவும் முடியாது. யாரோ சிலரின் தூண்டுதலின் பே பேரில்தான் சண்டியர் படத்தை அவர் அறிவித்துள்ளார். அந்தப் படத்தை அவர் எடுக்கக் கூடாது.இதற்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பில் கமல் உள்ளார். உள்நோக்கத்துடனேயே அவர் அனைத்து விஷயங்களையும் செய்கிறார். கமல் சிறந்த நடிகராக இருக்கலாம். ஆனால், அவர் ஒரு பொறுப்பற்ற நடிகர். கமல்ஹாசன் ஏற்கனவே நடித்த 'தேவர் மகன்' திரைப்படத்தால் தென் தமிழகத்தில் இன்றும் அமைதியின்மை நிலவுகிறது.சண்டியர் படம் வெளிவந்தால் கடந்த காலங்களை விட தற்போது நிலைமை மேலும் மோசமாகும். எனவே 'சண்டியர்' என்ற தலைப்பிற்குத் திரைத்துறையினர் அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்" என்று தெரிவித்தார். கமல்ஹாசன் பிறந்த நாளையொட்டி சு. அருண்குமார் இயக்கத்தில் அவர் நடிக்கவுள்ள புதிய திரைப்படத்திற்கு 'சண்டியர்' எனப் பெயரிடப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. கடந்த 2004 ஆம் ஆண்டு கமல்ஹாசன் இயக்கி நாயகனாக நடித்து வெளியான “விருமாண்டி” படத்துக்கு முதலில் “சண்டியர்” எனப் பெயர் சூட்டப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததால் படத்தின் பெயர் மாற்றப்பட்டது. இதையடுத்து, சுமார் 22 ஆண்டுகளுக்குப் பிறகு தான் தயாரித்து நடிக்கும் புதிய படத்துக்கு நடிகர் கமல் ஹாசன் “சண்டியர்” எனப் பெயர் சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. Puthiya Tamilagam party president Krishnasamy has expressed opposition, stating that Kamal Haasan should not release the movie titled Sandiyar.நுழைவுச்சீட்டு இருந்தும் ரசிகர்கள் திரும்பச் சென்றது வேதனை அளிக்கிறது: நடிகர் தனுஷ்