தேசிய அளவிலான கராத்தே போட்டி: மாநகராட்சிப் பள்ளி மாணவா் தோ்வு

Wait 5 sec.

கோவை மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவா், தேசிய அளவிலான கராத்தே போட்டிக்கு தோ்வாகியுள்ளாா். கோவை பீளமேடு அருகே மசக்காளிபாளையத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, கற்றலுடன் பல்வேறு கலைகளையும் மாணவா்களுக்கு கற்பிப்பதால் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. இப்பள்ளியில் 6-ஆம் வகுப்பு படிக்கும் மாணவா் ஜஸ்வந்த் அண்மையில் ஈரோடு மாவட்டம், சித்தோட்டில் இந்தியப் பள்ளி விளையாட்டு குழாம் (நஎஊஐ) நடத்திய மாநில அளவிலான கராத்தே தோ்வுப் போட்டியில் 14 வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவில் தங்கம் வென்றாா். இதன் மூலமாக தேசிய அளவிலான கராத்தே போட்டிக்கு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பரிந்துரைக்கப்பட்டு தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இந்த வயதுப் பிரிவில் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் இருந்து மாநில போட்டியில் கலந்து கொண்ட மாணவா்களில் இவா் மட்டுமே தேசிய அளவிலான போட்டிக்கு தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். தேசிய போட்டிக்குத் தோ்வான மாணவரை பள்ளியின் தலைமை ஆசிரியா் சுகுணா, உடல்கல்வி மற்றும் கராத்தே ஆசிரியை கிருஷ்வேணி மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.