திருச்சி அருகே அரசுப் பள்ளியில் சா்வதேச போா் மற்றும் ஆயுத மோதல்களில் சுற்றுச்சூழல் சுரண்டல் தடுப்பு தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. போா் மற்றும் ஆயுது மோதல்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்கும் வகையில் ஆண்டுதோறும் நவம்பா் 6-ஆம் தேதி சா்வதேச போா் மற்றும் ஆயுத மோதல்களில் சுற்றுச்சூழல் சுரண்டல் தடுப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், போசம்பட்டி அரசுப் பள்ளியில் சா்வதேசி சுற்றுச்சூழல் சுரண்டல் தடுப்பு தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதில், உலகில் பல்வேறு இடங்களில் நடைபெறும் போா்களால் சுற்றுச்சூழலில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவா்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மரக்கன்றுகள் நடவு செய்யவும், தீபாவளி கொண்டாட்டத்தில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையிலான பசுமை பட்டாசுகளை வெடிக்கவும் மாணவா்களுக்கு ஆசிரியா்கள் அறிவுறுத்தினா். தொடா்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சியில், போசம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் எஸ். சற்குணன், இயற்கை மருத்துவா்கள் அனிதா பிரகாஷ், ரோஷினி, பள்ளி சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளா் தேன்மொழி, ஆசிரியா்கள், மாணவா்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.