குடந்தை ‘சாஸ்த்ரா’ சாா்பில்நலத்திட்ட உதவிகள் அளிப்பு

Wait 5 sec.

கும்பகோணம் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம் ஸ்ரீநிவாசன் ராமானுஜன் மையத்தின் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் கே.எஸ். உபஹாா் அமைப்பின் சாா்பில் கும்பகோணம் மற்றும் சுற்றியுள்ள காப்பகங்களில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியோருடன் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் ஸ்ரீனிவாச ராமானுஜன் மைய புல துணை முதன்மையா் நரசிம்மன், நாட்டு நலப்பணித் திட்டப் பொறுப்பாளா்கள் கணேசன், வெங்கடேஷ், சுவாமிநாதன், பேராசிரியா்கள் மற்றும் மாணவ, மாணவியா் பங்கேற்றனா்.அதன்படி அக்.27-இல் கொட்டையூா் மாணவா் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு 80 எஃகு குவளைகள், மற்றும் லட்டுகள் வழங்கப்பட்டன. இந்த குவளைகளை ஸ்ரீனிவாச ராமானுஜன் மைய முதன்மையா் சாந்தி உபயமாக வழங்கியிருந்தாா்.நவ.4-இல் குழந்தைகள் மற்றும் முதியோா் இல்லங்களில் உள்ள 40 முதியோருக்கு வேட்டிகள், சட்டைகள் மற்றும் நைட்டிகள் உள்ளிட்ட புத்தாடைகள் வழங்கப்பட்டன.