மீனவர்கள் காணாமல் போனதாகத் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? கனிமொழி எம்.பி. கேள்வி

Wait 5 sec.

சென்னை காசிமேட்டில் இருந்து கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் முரசு புயலில் சிக்கி உயிரிழந்தபோதிலும் பாதிக்கப்பட்டோரை மீன்வளத் துறை அமைச்சர் சந்திக்காதது ஏன் என திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.சென்னை காசிமேட்டில் இருந்து மீன்பிடிப்பதற்காக அக். 29-ல் 9 மீனவர்கள் கடலுக்குள் சென்றபோது, முரசு புயல் உருவானதால் ஆந்திரத்தின் ராமாயபட்டினம், நிசாம்பட்டினம் துறைமுகங்களில் நவ. 2-ல் தங்களின் படகுகளை நிறுத்தினர்.இருந்தபோதிலும் கடலோர காவற்படை அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் ராமாயபட்டினம் நோக்கி 9 மீனவர்களும் சென்றதால் புயலில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, மீனவர்கள் மாயமானட் நிலையில் ஆந்திரத்தின் கடலோரப் பகுதிகளில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த கனிமொழி எம்.பி., "முரசு புயலில் சிக்கி சென்னை காசிமேடு மீனவர்கள் உயிரிழந்த செய்தி வேதனையளிக்கிறது. அவர்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.மீனவர்கள் காணாமல் போனதாகத் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? இத்துயரத்திற்கு பிறகும் மீன்வளத் துறை அமைச்சர் மீனவ மக்களைச் சந்திக்க வராதது ஏன்?பேரிடர் காலத்திலும் அலட்சியமாக செயல்பட்ட தவெக அரசு இந்தத் துயரத்திற்கு உடனடியாக பொறுப்பேற்று, உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கான நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.தவெக ஆட்சியைக் கவிழ்க்க ரூ. 30 கோடி பேரம்: மதுரை எம்எல்ஏ முஸ்தபா புகார்Why was no action taken even after being informed that the fishermen had gone missing? DMK MP Kanimozhi’s question