தீபாவளி! ராமாயணம் படக் காட்சியை பகிர்ந்து ஈரான் வாழ்த்து!

Wait 5 sec.

ராமாயணம் திரைப்படக் காட்சியைப் பகிர்ந்து ஈரானிய தூதரகம் இந்தியர்களுக்கு தீபாவளி வாழ்த்துத் தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த பிப்.28 ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டுவர பல்வேறு நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன. இதையடுத்து, வரும் ஞாயிற்றுக்கிழமை (நவ. 8) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகி வெளியான “ராமாயணம்” படத்தின் காட்சியைப் பகிர்ந்து ஈரானிய தூதரகம் இன்று இந்தியர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளது. இந்தப் பதிவில், அமெரிக்க படைகள் ஈரானுக்குள் வருவதற்கு நாங்கள் காத்துக்கொண்டிருக்கிறோம் என ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறிய காட்சியும், ராமாயண போர் காட்சியும் இணைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி, அந்தப் பதிவில், “நன்மையும் தீமையும் காலங்காலமாகப் போரிட்டு வருகின்றன. தீயவர்களுக்கு ஒரு கெட்ட செய்தி: இந்த கதை எப்படி முடியும் என்பது ஈரானுக்கும் இந்தியாவுக்கும் தெரியும்!தீபாவளி நல்வாழ்த்துகள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா உடனான போரை, ராமாயணப் போர் உடன் ஒப்பிட்டு, ஈரான் வெளியிட்டுள்ள இந்தப் பதிவு இந்தியர்கள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக, ஹோர்முஸ் நீரிணை வழியாக இந்திய கப்பல்கள் சுதந்திரமாகச் செல்ல சிறப்பு அனுமதி வழங்கப்படுவதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.பராகுவேவின் புதிய அதிபராக பெட்ரோ அலியானா பதவியேற்பு! முன்னாள் அதிபருக்கு வீட்டுக் காவல்!The Iranian Embassy has extended Diwali greetings to Indians by sharing a scene from the Ramayana.