இல்லங்கள்தோறும் ஆனந்தம் பெருகி... முதல்வர் விஜய் தீபாவளி வாழ்த்து!

Wait 5 sec.

தமிழக முதல்வர் ஜோசப் விஜய், மக்களுக்கு தனது தீபாவளி வாழ்த்துகளை சனிக்கிழமை (நவ. 7) தெரிவித்துள்ளார்.தீபாவளித் திருநாள், நாளை கொண்டாடப்படும் நிலையில் பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில், தீபாவளி வாழ்த்தாக முதல்வர் விஜய் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:மக்கள் மனங்களில் புதிய நம்பிக்கையையும், புத்துணர்வையும், மகிழ்ச்சியையும் மலரச் செய்யும் தீபாவளித் திருநாளில், அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்! இருள் நீங்கி ஒளி பிறக்கும் நாளாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும் வெற்றித் திருநாளாகவும் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையைப் பாதுகாப்போடும், மிகுந்த உற்சாகத்தோடும் கொண்டாடி, அளவற்ற அன்பையும், மகிழ்ச்சியையும் அனைவருடனும் பகிர்ந்து கொள்வோம். இல்லங்கள்தோறும் ஆனந்தம் பெருகி, அனைவரின் வாழ்விலும் புது நம்பிக்கை பிறந்து, உற்சாகம் பொங்கிப் பெருகும் நாளாக இத்திருநாள் அமையட்டும் என்று முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.மக்கள் மனங்களில் புதிய நம்பிக்கையையும், புத்துணர்வையும், மகிழ்ச்சியையும் மலரச் செய்யும் தீபாவளித் திருநாளில், அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்!இருள் நீங்கி ஒளி பிறக்கும் நாளாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும் வெற்றித் திருநாளாகவும் கொண்டாடப்படும் தீபாவளிப்… pic.twitter.com/jVJvBECXbz— CMOTamilNadu (@CMOTamilnadu) November 7, 2026நூல் கொள்முதல் முறைகேடு: இந்தியாவின் முதல் ஏஐ ஊழல்– அமைச்சர் ராஜ்மோகன் குற்றச்சாட்டு! Tamil Nadu Chief Minister Joseph Vijay extended his Diwali greetings to the public on Saturday (Nov. 7).