பாட்டியாலா அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: பதற்றமடைந்த பயணிகள்!

Wait 5 sec.

பாட்டியாலா அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா மாவட்டத்தில் உள்ள ராஜ்புரா அருகே, அமிர்தசரஸ் நோக்கிச் சென்ற கர்மபூமி எக்ஸ்பிரஸ் ரயிலின் நான்கு பெட்டிகளில் வெள்ளிக்கிழமை தீப்பிடித்தது. இதனால் பயணிகள் மத்தியில் கடும் பதற்றம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால், எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. மின்கசிவு காரணமாகவே இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதல்கட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், தீ விபத்துக்கான சரியான காரணம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இச்சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட காட்சிகளில், ரயிலின் பல பெட்டிகளிலிருந்து தீப்பிழம்புகளும் அடர்ந்த புகையும் வெளியேறுவதும், அவசரகால மீட்புப் பணியாளர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுவதும் பதிவாகியுள்ளது. இதுகுறித்து காவல் துறை அதிகாரி கூறுகையில், "ராஜ்புரா அருகே உள்ள சராய் பஞ்சாரா ரயில் நிலையத்தை ரயில் நெருங்கியபோது, அதன் பொதுப் பெட்டியில் முதலில் தீப்பிடித்தது. அந்தத் தீ, கணநேரத்தில் அருகிலிருந்த மேலும் இரண்டு பெட்டிகளுக்கும் பரவியது" என்றார். தீப்பிடித்ததை உணர்ந்தவுடன் உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. இதனால் அச்சமடைந்த பயணிகள், பாதிக்கப்பட்ட பெட்டிகளிலிருந்து அவசரா அவசரமாக வெளியேறினர். இந்த விபத்தில் நான்காவது பெட்டியும் லேசான சேதமடைந்தது. இருப்பினும், யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. பாதிக்கப்பட்ட பயணிகள் அனைவரும் பின்னர் மாற்று ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர் என்று அவர் தெரிவித்தார்.A fire broke out in four coaches of the Amritsar-bound Karmabhoomi Express near Rajpura in Punjab’s Patiala district on Friday, triggering panic among passengers. No casualties have been reported so far, as all passengers were safely evacuated.முதல்வர் விஜய்யுடன் இஸ்ரோ தலைவர் சந்திப்பு!